கரூர் விபத்து: சிபிஐ விசாரணை தீவிரம்

352பார்த்தது
கரூர் துயர சம்பவம் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் கடந்த ஐந்து நாட்களாக 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் விசாரணை நடைபெற்றது. இன்று ஆறாவது நாளாக, கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கியிருக்கும் சிபிஐ அதிகாரிகளிடம், நெரிசலில் சிக்கி காயம் அடைந்த ஏழு பேர் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி