கரூர், வேலாயுதம்பாளையம் பகுதியில் நாமக்கல்லைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் பைக்கில் சென்றபோது, கார் மற்றும் பைக்கில் வந்த 7 பேர் அவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி 10 பவுன் செயின் மற்றும் செல்போனைப் பறித்துச் சென்றனர். வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த பூமிநாதன் (46), கரூரைச் சேர்ந்த சிவக்குமார் (எ) கிஷாபாய் (25), நாமக்கல்லைச் சேர்ந்த சிலம்பரசன் (38), கார்த்திகேயன் (எ) அப்துல்ஷாருக் (42), வடிவேல் (41), சத்யராஜ் (31), சக்திவேல் (53) ஆகிய 7 பேரை நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், பைக் மற்றும் 10 பவுன் செயின் கைப்பற்றப்பட்டு, அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.