கரூர் மாவட்டத்தில் மது விற்ற 9 பேர் கைது

2பார்த்தது
கரூர் மாவட்டத்தில் மது விற்ற 9 பேர் கைது
கரூர் மாவட்டம் லாலாபேட்டை, வாங்கல், குளித்தலை, கரூர், பசுபதிபாளையம், வெள்ளியணை ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக தகவல் வெளியானது. இந்த தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, மது விற்ற குமார் (49), மணி (59), பிரியா (43), வெற்றிவேல் (47), மனோஜ் (20), இளங்கோவன் (52), சக்திவேல் (57), பார்வதி (50), சகுந்தலா (47) ஆகிய 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 251 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி