மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த லலிதாகெயின் (43) வெண்ணமலையில் கணவருடன் தங்கி தனியார் டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திங்கள்கிழமை சின்னவடுகப்பட்டி பிரிவு ரோடு அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, இருசக்கர வாகனம் மோதி தலையில் பலத்த காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வாங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.