தைலமர காட்டில் மூதாட்டி மீது தாக்குதல் போலீஸ் வழக்கு பதிவு

360பார்த்தது
கரூர் மண்மங்கலம் அருகே உள்ள வாங்கல் செவ்வந்திபாளையம் தைலமர தோட்டத்தில், அனுமதி இன்றி நுழைந்து மரங்களை வெட்டியதை தட்டி கேட்ட பெண் கூலி தொழிலாளி தாக்கியவர் மீது , மூன்று பிரிவுகளில் வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுகா செவந்திபாளையம் பகுதியில், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை மூலம் வளர்க்கப்பட்டு வரும், தைல மர தோட்டத்தில் வாங்கல் ஈவிஆர் நகர் பழனிவேல் மனைவி கோவிந்தம்மாள் வயது 60 என்பவர் கூலி அடிப்படையில் தோட்டத்தை பராமரிப்பு செய்து வருகிறார்.

சம்பவத்தன்று வாங்கல் ஈ வி ஆர் தெரு ராமசாமி மகன் ராஜேந்திரன் என்ற கட்டையன் வயது 50 என்பவர் தோட்டத்தில் அனுமதியின்றி, தைலமரத்தை வெட்டியதை தட்டி கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் என்கிற கட்டையன் மரக்கட்டையால், கோவிந்தம்மாளை தாக்கியதில் தலை மற்றும் இடது கண் மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக வாங்கல் காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார், மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிந்து ராஜேந்திரன் என்கிற கட்டையன் வயது 50 என்பவரை கைது செய்து அக்டோபர் 7ஆம் தேதி விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி