கரூரில் குகைவழி பாதையில் சாரை பாம்பு புகுந்ததால் பரபரப்பு
கரூர்-வெங்கமேடு சாலையில் உள்ள குளத்துப்பாளையம் ரயில்வே குகைவழிப் பாதையில் திடீரென 5 அடி நீள சாரைப்பாம்பு ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் பதற்றமடைந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், கருவிகளின் உதவியுடன் பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
