கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, காமகாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் மனைவி தமிழ்ச்செல்வி வயது 40. இதேபோல மகாலட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த தனுஷ்கோடி வயது 55, இவரது மனைவி சுமதி வயது 47. இவர்கள் மூன்று பேரும் மார்ச் 17ஆம் தேதி இரவு 7:15 மணியளவில், பாளையத்திலிருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் மகாலட்சுமிபுரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், அய்யலூர், களத்து வீடு பகுதியைச் சேர்ந்த குமரன் மகன் பழனிச்சாமி வயது 29 என்ற இளைஞன், எதிர் திசையில் வேகமாக ஓட்டி வந்த டூவீலர், நடந்து சென்ற தமிழ்செல்வி, தனுஷ்கோடி, சுமதி ஆகியோர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால், மூவரையும் மீட்டு தமிழ்செல்வி மற்றும் தனுஷ்கோடி ஆகிய இருவரையும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், சுமதியை கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த முனியப்பன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட அரவக்குறிச்சி காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.