கரூர் வெங்கமேடு செங்குந்தர் நகரைச் சேர்ந்த 20 வயது சக்திவேல், நேற்று முன்தினம் (மே 20) வாங்கல் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த கார் மோதி படுகாயமடைந்தார். அவரது வலது கால் மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், இதுகுறித்து வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.