கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி முன்னூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது சந்தோஷ், நேற்று சேலை நாயக்கன்பட்டி பன்னிமேடு அருகே பைக்கில் சென்றபோது அடையாளம் தெரியாத லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மாமனார் இரத்தினகுமார் அளித்த புகாரின் பேரில், தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.