கரூர் தாந்தோணிமலை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (54) என்பவர் நேற்று கரூர் சுங்ககேட் சாலையில் ஸ்கூட்டரில் சென்றபோது, கல்லூரி மாணவர் ருத்ரன் ஓட்டி வந்த பைக் மோதியதில் காயமடைந்தார். தலையிலும் மூக்கிலும் ரத்தக்காயங்களுடன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவிந்தசாமியின் மகன் சூரியபிரகாஷ் அளித்த புகாரின் பேரில், தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.