கரூர் மாவட்டம் தாந்தோணி மலை தனியார் மண்டபத்தில் இன்று ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் பசுவை பாரதி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தும், தவெக கட்சித் தலைவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில நிதி செயலாளர் திருமாவளவன், மாநில இளைஞரணி துணை செயலாளர் ஆசிரியர் ரமேஷ், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.