கரூரில் இளைஞர்களுக்கான வேளாண் தொழில்நுட்ப பயிற்சி

1பார்த்தது
கரூரில் இளைஞர்களுக்கான வேளாண் தொழில்நுட்ப பயிற்சி
கரூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் IOB ஆர்சிட்டி பயிற்சி மையத்தில், கிராமப்புற இளைஞர்களுக்கான பட்டு வளர்ப்பு, காளான் வளர்ப்பு மற்றும் நாற்றங்கால் உற்பத்தி குறித்த தொழில்முனைவோர் வாய்ப்புகள் பற்றிய தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இதில் புழுதேரி வேளாண் அறிவியல் மையத்தின் விஞ்ஞானி திரவியம் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார். இந்த பயிற்சி இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you