கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடாங்கிபட்டி பகுதியில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், அக்கட்சியால் செய்யப்பட்ட திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வீடு வீடாக வழங்கி, தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.