சட்டப்பேரவையில் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்ததால், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக கரூர் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த கமலக்கண்ணன் மா.செ.-ஆக அறிவிக்கப்பட்டார். இதனிடையே நேற்று கரூர் பழனியப்பா தெருவில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் கமலக்கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்றர். இதையறிந்து வந்த விஜயபஸ்கர் தரப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.