கரூர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

381பார்த்தது
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவம்பர் 5 ஆம் தேதி மாலை, அருள்மிகு பசுபதீஸ்வரர், நாகேஸ்வரர், கரியமாலீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், சுவாமி திருமேனி முழுவதும் அன்னம் சார்த்தி அன்னாபிஷேகமும் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆடல்வல்லான் கலை அறக்கட்டளை சார்பில் பரதாஞ்சலி ஆடல் பாடல் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கண்டுகளித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி