மாற்று இடம் வழங்க கோரி அரவக்குறிச்சி மக்கள் மனு

327பார்த்தது
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சி பட்டாணி தெரு மக்கள் 2007 ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி மனு அளித்துள்ளனர். வேலாம்பாடி கிராமத்தில் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு நில அளவை செய்து தரவும், ஈசநத்தம் ஊராட்சி குள்ளம்பட்டியில் 35 ஆண்டுகள் பழமையான இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகளை பழுது நீக்கம் செய்து மாற்று வீடுகள் கட்டித் தரவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.