கரூர் பசுபதிபாளையம் ஆண்டாள் நகரைச் சேர்ந்த 50 வயதான ஆட்டோ ஓட்டுநர் கார்த்திகேயன், கடந்த 29ஆம் தேதி ஈஸ்வரன் கோவில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே விழுந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கார்த்திகேயனின் மனைவி உமா அளித்த புகாரின் பேரில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.