கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் கையெழுத்து இயக்கம் இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1976 அமல்படுத்தப்பட்ட தினமான இன்று, பொதுமக்களிடம் சட்டத்தைப் பற்றியும் அதன் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.