கரூரில் பாஜக பெண் நிர்வாகி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

0பார்த்தது
கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் பவானி துரைப்பாண்டி திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்து விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அலுவலகத்திற்கு வெளியே சாலையில் அமர்ந்து கண்ணீர் மல்க தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மேலும் விவரங்கள் அறியப்படவில்லை.