பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகளை கண்டித்து பாஜக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
கரூர் மாவட்ட பாஜ மகளிர் அணி சார்பில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன் கொடுமைகளை கண்டித்து கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட பாஜ மகளிர் அணி தலைவி பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மகளிர் அணி மாநில செயலாளர் ராதிகா சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் மீனா முன்னிலை வகித்தார். இதில் மகளிர் அணியினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி