கரூர்-கோவை சாலையில், பொன்னுச்சாமி என்பவர் தனது மனைவி செல்வி, மகள் தனுசியாவுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் கார் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பொன்னுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரமத்தி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்தனர்.