கரூர், சின்னாண்டாங் கோவில், திருப்பதி லே அவுட் 2-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது 55. இதே போல கரூர் தாந்தோணி மலை, கோடங்கிபட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன் மனைவி சரோஜா வயது 55. இருவரும் பிப்ரவரி 21ஆம் தேதி காலை 7 மணி அளவில் மதுரை- சேலம் சாலையில் டூவீலரில் சென்றனர். இவர்களது வாகனம் மண்டிக்கடை மதன் கார் டெக்கர்ஸ் கடை அருகே சென்ற போது, மதுரை மாவட்டம், பேரையூர், அத்திப்பட்டி, வடக்கு தெருவைச் சேர்ந்த நாகார்ஜூன் வயது 24 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் ரவிச்சந்திரன் ஓட்டிச் சென்ற டூ வீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.
இதனால் வாகனத்துடன் கீழே விழுந்ததில் பின்னால் அமர்ந்து வந்த சரோஜா மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக சரோஜா அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நாகார்ஜூன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.