கரூர் மாவட்டத்தில் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, சிபிஐ அதிகாரிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து, பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, கோதுர் பகுதியில் உள்ள பழனியம்மாள் மற்றும் கோகிலா என்ற இரு சிறுமிகளின் வீட்டில் மூன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணை சம்பவத்தின் பின்னணியை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது.