கரூர் காமராஜபுரம் மூன்றாவது தெருவில் வசிக்கும் ராம்குமார் என்பவரின் வீடு தேடி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் பட்டியலில் ராம்குமார் பெயர் இடம்பெறாததால், சம்பவத்துடன் அவருக்குள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ராம்குமார், "வாய்ஸ் ஆப் காமன்ஸ்" என்ற அமைப்பில் பணியாற்றி வருவதாகவும், இந்த அமைப்பு தவெக அரசியல் ஆலோசகர் ஆதவ் அர்ஜுனா நடத்தி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.