கரூர் வெங்கமேடு ஜமியா நகரைச் சேர்ந்த 33 வயதான இஸ்மாயில், சின்ன குளத்து பாளையத்தில் கோழிக்கடை நடத்தி வந்தார். நேற்று இயந்திரம் மூலம் கோழிகளை சுத்தம் செய்யும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மனைவி அபிதா பானு அளித்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.