கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை (நவம்பர் 6) கரூர் மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், குழந்தை திருமணம் தடுத்தல் குறித்த விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சரஸ்வதி விரிவாக்க அலுவலர் (சமூக நலன்) கமலா, மகளிர் ஊராட்சி அலுவலர் பூரணம், மகளிர் ஊரகத் துறை அலுவலர் துறை சார்ந்த அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.