கரூர் மாவட்டம் வெங்கமேடு செங்குந்த நகரில், உமாபதி - மல்லிகா தம்பதியினரின் 2 வயது மகன் கிருத்திக், விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டின் மாடியில் உள்ள அறைக்குள் தானாக கதவு தாழிட்டுக் கொண்டது. பூட்டிய அறைக்குள் குழந்தை மாட்டிக்கொண்டதால், பெற்றோர்கள் தவிக்க நேர்ந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான வீரர்கள், டோர் ஓபனர் கொண்டு இரண்டே நிமிடத்தில் குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதனால் பெற்றோர்கள் நிம்மதி அடைந்தனர்.