கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குற்றவியல் நீதிபதி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு, பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.