கரூர்: 11 தீர்மானங்கள் நிறைவேற்றம்

84பார்த்தது
கரூர் அடுத்த தாந்தோணி மலை தனியார் கூட்டரங்கில் கரூர் மாவட்ட சோழிய வெள்ளாளர் சமுதாய மக்கள் மாநில மாநாடு கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தலைவர் மலைக்கொழுந்து பிள்ளை தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயல் தலைவர் சிவசாமி பிள்ளை, மாவட்ட செயலாளர் மாரிமுத்து பிள்ளை, கரூர் மாநகர தலைவர் பெரியசாமி பிள்ளை, விழா ஒருங்கிணைப்பாளர் ஸ்காட் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சோழிய வெள்ளாளர் சங்கத்தின் மாநில தலைவர் மருத்துவர் செந்தில் பிள்ளை கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். 

விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் கிடைக்க போராடிய முன்னாள் விவசாய சங்க தலைவர் ராஜமாணிக்கம் பிள்ளை நூற்றாண்டு விழாவை தமிழக அரசு விழாவாக நடத்த வேண்டும் எனவும், கரூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள நஞ்சை புகலூர் & மாயனூர் தடுப்பணைகளில் இருந்து மழை மற்றும் வெள்ள காலங்களில் வரும் உபரி நீரை மாவட்டத்தில் உள்ள பெரிய தாதம்பாளையம், வெள்ளியணை, பஞ்சப்பட்டி ஏரிகளுக்கு அனுப்பி விவசாயத்திற்கு உதவ வேண்டும் எனவும், லாலாபேட்டையில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் எனவும், ஜூலை 13ல் திருச்சி மாநில மாநாட்டில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்களை நிறைவேற்றினர்.

தொடர்புடைய செய்தி