பதினான்காவது ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக, கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்த ட்ராபி டூர் பேருந்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேற்று வரவேற்று பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் சிலம்பாட்டம், ஸ்கேட்டிங், தப்பாட்டம், பறை, பரதநாட்டியம், தேசிய மாணவர் படை அணிவகுப்பு, ஹாக்கி விளையாட்டு வீராங்கனைகளின் அணிவகுப்பு மற்றும் சிறப்பு விருந்தினர்களுடன் மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.