கரூரில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை பார்வையிட்ட ஆட்சியர்

1பார்த்தது
கரூரில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை பார்வையிட்ட ஆட்சியர்
கரூர் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் இன்று முதல் வருகின்ற 26 ஆம் தேதி வரை 47 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10,351 மாணாக்கர்கள் தேர்வு எழுதுகின்றனர். இன்றைய தமிழ் பாடத் தேர்வை 10,174 மாணாக்கர்கள் எழுதினார்கள். 175 மாணாக்கர்கள் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் இன்று தெரிவித்துள்ளார். இந்த ஆய்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜு மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.