கரூர் அருகே ஆத்தூர் பகுதியில் உள்ள சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் நிலையத்தில் பேருந்துகளுக்கு மட்டுமே எரிவாயு நிரப்பப்படுவதால், கார்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கின்றனர். 50-க்கும் மேற்பட்ட கார்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், கார் ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அனைத்து வாகனங்களுக்கும் சிஎன்ஜி நிரப்பப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.