கரூர் கிருஷ்ணராயபுரம் மேளக்கார தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அமிர்தானந்தம், தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தை, கிருஷ்ணராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு வேறொரு நபருக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ய முயற்சி செய்ததாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். பட்டா எண் 1827, புல எண் 167/16பி நிலம் தனது தந்தை முத்துசாமி பெயரில் தாய் பத்திரம் உள்ள நிலையில், கிரைய பத்திர ஆவண எண் 252/2026 படி, வேறொரு நபருக்கு எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கண்ட பத்திரத்தை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார். இதற்காக, பத்திரத்தின் நகலை மாலையாக அணிந்து நூதன முறையில் வந்து மனு அளித்தார்.