கரூர்: மது போதையில் சாயக்கழிவு வாய்க்காலில் விழுந்து உயிரிழப்பு

66பார்த்தது
கரூர் மாவட்டம், ராயனூர், ஆர்.கே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் வயது 41. அண்மைக்காலமாக இவர் மதுபோதைக்கு அடிமையானதால், எப்போதும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மார்ச் 16ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 10:30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் அருகில் உள்ள செல்லாண்டிபாளையம் சாலையில், தனியார் டையிங் நிறுவனம் அருகே ஓடும் சாய்க்கழிவு நீர் வாய்க்காலில் எதிர்பாராத நேரத்தில் விழுந்துவிட்டார். 

இதுகுறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அளித்த தகவலின் பேரில், செந்தில்குமாரின் மனைவி யோகேஸ்வரி என்பவர் தனது கணவரை வாய்க்காலில் இருந்து தூக்கி, பிறகு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுசென்று அனுமதித்தார். அங்கு செந்தில்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த யோகேஸ்வரி, இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர், உயிரிழந்த செந்தில்குமார் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பிவைத்து இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி