கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குறித்து அவதூறாக பேசிய கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.பி ஜோதிமணி எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கரூர் நகர காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. ஜோதிமணி குறித்தான அவதூறு பேச்சுக்கு சமூகவலைதலளங்களில் பல்வேறு அரசியல் கட்சியை தேர்ந்த பெண் நிர்வாகிகள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.