வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களால் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப பெற்று, தன்னார்வலர்கள் மூலம் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தங்கவேல் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியலை மேம்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.