கரூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR சீராய்வை உடனடியாக கைவிடக் கோரியும், ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி தன்னிச்சையாக செயல்படுவதைக் கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள், பொறுப்புக் குழு உறுப்பினர்கள், நகர ஒன்றிய மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, பாஜக அரசை கண்டித்தும், SIR சீராய்வை கைவிடக் கோரியும் பதாகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.