கரூர் மாவட்டத்தில் ஸ்கேனிங் சென்டரில் மருத்துவரை நோயாளி ஒருவர் தாக்கிய சம்பவத்தை அடுத்து, இந்திய மருத்துவ சங்க கரூர் மாவட்ட செயலாளர் சதாசிவம் செய்தியாளர்களை சந்தித்தார். மருத்துவர் மீதான தாக்குதல் சம்பவத்தில், தாக்கிய நபர்கள் மீது இந்திய மருத்துவ சட்டப்படி ஜாமினில் விடுவிக்க முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.