அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஈசநத்தம் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 17 சிறப்பு மருத்துவ சேவைகள் பொது மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாவட்ட ஆட்சியர் தலைவர் தங்கவேல், அரவக்குறிச்சி வட்டாட்சியர் பிரபாகர், PDO ராஜேந்திரன், முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினர்.