ஈசநத்தம் மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்

228பார்த்தது
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஈசநத்தம் கிராமத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் விநாயகர், பகவதி அம்மன், முத்தாலம்மன், கருப்பண்ணசாமி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று திங்கட்கிழமை (10.11.2025) காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை நடைபெற்றது. கரூர் முரளி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு செய்யப்பட்டு, கும்ப கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கோமாதா பூஜை நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.