கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், கட்டளை ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி (65) என்பவர், நேற்று காந்திகிராமம் பெட்ரோல் பங்க் அருகே பைக்கில் சென்றபோது, எதிரே வந்த பொன்னம்பலம் ஓட்டி வந்த ஸ்கூட்டி மோதியதில் கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்குத் தலை மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சின்னத்தம்பியின் மகள் கலையரசி அளித்த புகாரின் பேரில், தாந்தோணி மலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.