க. பரமத்தியில் தனியார் பேருந்து மோதி முதியவர் படுகாயம்

2பார்த்தது
க. பரமத்தியில் தனியார் பேருந்து மோதி முதியவர் படுகாயம்
கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா பவித்திரம் பகுதியை சேர்ந்த பெத்தான் (70) என்பவர் நேற்று முன்தினம் தண்ணீர்பந்தல் பிரிவு அருகே தனது டிவிஎஸ் எக்ஸெல் வாகனத்தில் சென்றபோது, பிரசாந்த் ஓட்டி வந்த தனியார் பேருந்து மோதியதில் பெத்தான் தலை, முழங்கால், தோள்பட்டையில் பலத்த காயமடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி லட்சுமி அளித்த புகாரின் பேரில், க. பரமத்தி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி