கரூர் மாவட்டம் புகலூர், வேட்டமங்கலத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (60) என்பவர், நேற்று முன்தினம் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் நஞ்சை புகலூர் சாலையில் சென்றபோது, அவ்வழியே வந்த டிராக்டர் மோதியதில் கீழே விழுந்து வலது தொடை மற்றும் வலது கண் அருகே காயமடைந்துள்ளார். அவர் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி சாவித்திரி அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.