கரூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்

0பார்த்தது
கரூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் லிங்கத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (70) என்பவர், நேற்று முன்தினம் லிங்கத்தூர் சர்வீஸ் சாலையில் சைக்கிளில் சென்றபோது, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மகன் நந்தகுமார் அளித்த புகாரின் பேரில், வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.