கரூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்

0பார்த்தது
கரூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்
கரூர் நரசிம்மபுரம் பகுதியைச் சேர்ந்த 76 வயதான நல்லுசாமி, தனது டிவிஎஸ் சாம்ப் வாகனத்தில் நேற்று கரூர் அமராவதி ஆற்று பாலத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தலையிலும் முகத்திலும் காயம் அடைந்த நல்லுசாமி கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது மகன் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில், கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி