கரூர் வெங்கமேடு செங்குந்தர் நகரைச் சேர்ந்த 70 வயதான சகுந்தலா, நேற்று வெங்கமேடு புளியமரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடக்கும்போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் தலையின் பின்புறம் மற்றும் இடது முழங்காலில் காயமடைந்துள்ளார். அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சகுந்தலாவின் மகன் தங்கவேல் அளித்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.