கரூரில் கார் மோதி நடந்து சென்ற மூதாட்டி படுகாயம்

0பார்த்தது
கரூரில் கார் மோதி நடந்து சென்ற மூதாட்டி படுகாயம்
கரூர் ஆண்டான் கோவில் புதூர் மில் கேட் பகுதியைச் சேர்ந்த 60 வயதான சரோஜா, நேற்று முன்தினம் சாலையில் நடந்து சென்றபோது, கந்தசாமி ஓட்டி வந்த கார் மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு முன் தலை மற்றும் இரண்டு முழங்காலில் காயம் ஏற்பட்டது. கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரோஜாவின் பேரன் தினேஷ் அளித்த புகாரின் பேரில், கரூர் நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி