கரூர் மாவட்டம் மணவாசி கேபி குளத்தைச் சேர்ந்த ஜெயம்மாள் (60) என்பவர், உறவினர் முனியப்பன் இருசக்கர வாகனத்தில் ராஜபுரம் டாஸ்மாக் பிரிவு அருகே சென்றபோது, பின்னால் வந்த டிராக்டர் மோதி நிற்காமல் சென்றதில் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து முனியப்பன் அளித்த புகாரின் பேரில் சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.