கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் போதுமான அளவில் உரங்கள், நெல் ரகங்கள், சிறுதானியங்கள், எண்ணைய் வித்துகள் ஆகியவை இருப்பில் உள்ளதாக விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 101 மனுக்களை ஆட்சியரிடம் சமர்ப்பித்தனர்.