கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, வீடு வீடாக சென்று படிவங்களை வழங்காமல் அங்கன்வாடி மையத்தில் அமர்ந்து வாக்காளர்களை வரவழைத்து படிவங்கள் வழங்கப்படுவதாகவும், வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் நேரில் வராமல் திமுக நிர்வாகிகள் வீட்டில் வைத்து படிவங்கள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.